தர்மபுரி நவ 7-
தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் "சட்டமன்ற நாயகர் கலைஞர்" கருத்தரங்கம் நடைபெற்றது .
தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணிகள் திட்டம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது .
"சட்டமன்ற நாயகர் கலைஞர்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் முனைவர் கோ.கண்ணன் தலைமை வகித்தார் , நாட்டு நலப்பணி திட்டம் அலுவலர் முனைவர் இரா.சந்திரசேகரன் வரவேற்று பேசினார்.
தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்ரமணி அவர்கள் கலந்துகொண்டு கல்லூரி மாணவ மாணவியர்களிடம் கலைஞர் கருணாநிதியை பற்றியும் அவர் கொண்டு வந்த வளர்ச்சிப் பணிகள் பற்றி சிறப்புரையாற்றினார் .
கல்லூரி மாணவ மாணவியர்கள் கலைஞர் கருணாநிதி பற்றி பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர் இதில் சிறப்பாக உரையாற்றிய மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம் , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.பி.முத்தமிழன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கி.தீர்த்தராமன் , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags
தர்மபுரி