ஏரியூரில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணி தொடக்கம்


பெண்ணாகரம் நவ 2-

ஏரியூர் அருகே புதிய தார் சாலை அமைப்பதற்கான பணியை பூமி பூஜை செய்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே மூங்கில் மடுவு பகுதியில் பகுதியில் நடைபெற்ற புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி செந்தில் குமார் கலந்துகொண்டு, மூங்கில் மடுவு பகுதியில் இருந்து சிடுவம்பட்டி இணைப்பு சாலை வரை செல்லக்கூடிய சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு பழங்குடியின நல திட்டத்தின் கீழ் ரூ 1.27 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி,  பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பி.தர்மச்செல்வன், மாவட்ட துணை செயலாளர்  உமா சங்கர், பொதுக்குழு உறுப்பினர் சோலை மணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் என்.செல்வராஜ், சி.வி மாது, ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சென்னையன், சேகர், பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال