"முத்தமிழ்த்தேர்" என்ற அலங்கார ஊர்தி இன்றுமுதல் தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்திட திட்டம் .

சென்னை நவ 4-

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படவேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 12குழுக்கள் அமைக்கப்பட்டன.

அதில், "எழுத்தாளர்-கலைஞர்" குழு. படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்திவருகிறது.

அந்தவகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பன்முகத்தன்மையினை எடுத்து செல்லும் வகையில், எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் "முத்தமிழ்த்தேர்" - அலங்கார ஊர்தி தயார் செய்யபட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தி 04.11.2023 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கன்னியாகுமரி, காந்தி மண்டபம் அருகில் உள்ள முக்கோணப்பூங்காவில் இருந்து மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்களால் துவக்கி வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள். மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோதங்கராஜ் அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகிக்கவுள்ளார்கள்.

இவ்விழாவில், மாண்புமிகு மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். துணை மேயர். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்.
சீர்மிகு பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ளார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் "முத்தமிழ்த்தேர்" என்ற அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் 04.11.2023 அன்று முக்கோணப்பூங்கா, பழத்தோட்டம், ஜீரோ பாய்ண்ட் ஆகிய இடங்களிலிலும், 05:11.2023 அன்று முதல் 05:12.2023 வரை கீழ்கண்ட நாட்களில் அந்தந்த மாவட்டங்களிலும் காட்சிப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post

نموذج الاتصال