கல்லறை திருநாள் : கல்லறைகளில் மலர் தூவி அனுசரிப்பு


பென்னாகரம் நவ -3

கல்லறை திருநாளை முன்னிட்டு நேற்று ஒகேனக்கல்லில் கல்லறைகளில் மலர் தூவி இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்திய கிறிஸ்துவ மக்கள் .
ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாம் நாள் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் கல்லறை திருநாளில் அவர்களின் கல்லறைக்கு வர்ணம் பூசி மலர்களால் அலங்கரித்தனர். அதனை தொடர்ந்து ஊட்டமலை பகுதியில் உள்ள தேவாலயத்தில்  இறந்தவர்களுக்காக திருப்பலி நடைபெற்று, தூய அருவி அன்னை ஆலய பங்குத்தந்தை லூகாஸ் மற்றும் அருட்தந்தை ஜார்ஜ் ஆகியோர்கள் பூக்களால் அலங்கரித்துள்ள கல்லறைக்கு தீர்த்தம் தெளித்து, ஆன்மா மேட்சம் அடைய சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال