பென்னாகரம் நவ 3-
பெங்களூரு மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் ஒகேனக்கலில் பழங்குடி இன மலைவாழ் மீனவர்களுக்கு இலவசமாக பரிசல்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் உள்ள மீன் வளர்ப்பு பண்ணையில் மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி கழக பெங்களூரு மையம் மற்றும் தமிழக மீன்வளத்துறை சார்பில் நடைபெற்ற பழங்குடியின மலைவாழ் மக்கள் மீனவர்களுக்கு பரிசல்கள் வழங்கும் நிகழ்விற்கு மீன்வளத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் விஞ்ஞானி முனைவர் மீனாகுமாரி, பெங்களூரு ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானிகள் முனைவர் பிரீத்தா, ரம்யா மற்றும் ஜெஸ்னா ஆகியோர்கள் மீன்வளத் துறையில் உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெறும் சலுகைகள் ஊக்கத்தொகைகள் குறித்து சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து ஒகேனக்கல் பகுதியைச் சேர்ந்த 10 பழங்குடி இன மலைவாழ் பரிசல் ஓட்டிகளுக்கு இலவசமாக பரிசல்களை வழங்கினர்.
இதில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோகுல ரமணன், மீன்வள ஆய்வாளர் வேலுச்சாமி, மாதேஷ் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags
தர்மபுரி