4 மாவட்டத்திற்கு அரசு மதுபான கடை நாளை விடுமுறை

சென்னை டிசம்பர் 3-

சென்னை மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாவட்டங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.மிச்சாங் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
Previous Post Next Post

نموذج الاتصال