தருமபுரியில் திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமையில் நடைபெற்றது

தருமபுரி டிசம்பர் 3-

தருமபுரி திமுக கழக அலுவலகம் கலைஞர் அறிவாலயம்  தளபதி அரங்கில்  மாவட்ட அவைத்தலைவர் சி.செல்வராஜ் அவர்கள் தலைமையில் செயற்குழு  கூட்டம்  நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி Ex.MLA அவர்கள்  சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு, BLA-2 மற்றும்  BLC பொறுப்பாளர்கள் பணிகள், நீட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் தாமரைச்செல்வன், செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் உமாசங்கர், தங்கமணி, ஆறுமுகம், ரேணுகா தேவி, செயற்குழு உறுப்பினர் சோலை மணி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், சரஸ்வதி துரைசாமி,
உடன் ஒன்றிய கழக செயலாளர் AS சண்முகம், வைகுந்தம், மல்லமுத்து,  ஏரியூர் செல்வராஜ், மடம் முருகேசன், வீரமணி, சபரிநாதன், சண்முகம், AK கருணாநிதி, நகர நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال