தர்மபுரி தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தை தடுக்க நிரந்தர தீர்வு ரூ 775 கோடியில் உயர்மட்ட சாலை ஒப்புதல். எம்.பி செந்தில்குமாருக்கு வாகன ஓட்டிகள் பாராட்டு

தருமபுரி டிசம்பர் 16-

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி என் வி செந்தில் குமார் அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக தர்மபுரி தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தை தடுக்க ரூபாய் 775 கோடியில் சாலை சீரமைப்பு பணி. 

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெறும் விபத்துக்களை தடுக்க மாற்றுப் பாதை அமைத்து விபத்துக்களை தடுக்க கோரிக்கை மனுவை நிதின் கட்கரி அவர்களிடம் வழங்கி இருந்தேன். அதன் தொடர் நடவடிக்கையாக 2020 ஆம் ஆண்டு நினைவூட்டல் கடிதமும் 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் விதி 377 கோரிக்கை வைத்திருந்தேன்.  2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது தொடர் வலியுறுத்தல் காரணமாக ஒன்றிய அரசு 775 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்க ஒன்றிய அரசு டெண்டர் கோரி உள்ளது. இச்சாலை அமைக்கப்பட்டால் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவு குறையும். இச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்தும் நேரமும் குறையும்.  இத்திட்டம் தருமபுரி மாவட்ட மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பலன். இந்தியாவிலேயே தொப்பூர் கணவாய் பகுதியில் தான் அதிக விபத்துக்கள் நடைபெறும் என்ற நிலை மாறும். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் எங்கு சென்றாலும் நான்கு வழி சாலை உள்ளது பெங்களூர் செல்ல இரண்டு புதிய வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளை விட அதிகமான போக்குவரத்துக்கு மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைக்கு அதிக நிதியை பெற்று தந்திருக்கிறோம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இரண்டாம் அலகு திட்டத்திற்கு 7800 கோடி நிதியில் ஒன்றிய அரசிடம் இருந்து நான்காயிரம் கோடியும் ஜிக்கா விடம் மீத தொகையும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தர்மபுரி தொகுதி மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் தருமபுரி செயலாக்கத்திற்கு வந்துள்ளதாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் மருத்துவா் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

வாகன ஓட்டிகள் பாராட்டு

ஒன்றிய அரசால் "black spot" என்கிற அதிக விபத்துகள் நிகழும் பகுதி என அறிவித்திருந்த தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் கனவாய் சாலை பகுதியில் நிகழ்ந்து வந்த விபத்து மற்றும் உயிரிழப்புகள் தடுக்கும் எண்ணத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்  டி.என்.வி செந்தில்குமார் அவர்கள் ஒன்றிய தரைவழி போக்குவரத்துறை அமைச்சர் அவர்களை தொடர்ந்து பல முறை நேரில் சந்தித்து வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று ஒன்றிய அரசு ரூ 775 கோடியில் உயர் மட்ட சாலை அமைக்க ஒப்பந்தத புள்ளி கோரியுள்ளது இதை அடுத்து இப்பகுதியில் உயர்மட்ட சாலை அமைக்க பட உள்ளத்தால் தருமபுரி எம்.பி டாக்டர் செந்தில்குமார் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Previous Post Next Post

نموذج الاتصال