நல்லம்பள்ளி டிசம்பர் 16-
நார்த்தம்பட்டி ஊராட்சியில்
14 இலட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியை கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நார்த்தம்பட்டி ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நேற்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு நார்த்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் என்.எஸ்.கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்ரமணி அவர்கள் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் 7 இலட்சம் மதிப்பிலான தனி நபர் குடிநீர் இணைப்பு பணி மற்றும் அருந்ததியர் காலனி பகுதியில் 7 இலட்சம் மதிப்பிலான கழிவறை கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.சி.துரைசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர்.பி.முத்தமிழன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் துரை, ராஜாராம், மாது, சன்முகம் , சரவணன், கலையரசன், இரவி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags
தருமபுரி