தருமபுரி டிசம்பர் 2-
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் விரைவில், பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி தருமபுரி அடுத்த அதியமான் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற காலபைரவர் கோவிலில் மாவட்ட செயலாளர்கள் விஜய்சங்கர் , குமார் தலைமையில் கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் மாநில அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தார்.
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜய்காந்த் கடந்த சில நாட்களாக, உடல்நலக்குறைவால், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், அவர் விரைந்து நலம் பெற்று வீடு திரும்பவும் மீண்டும் மக்கள் பணி ஆற்றவும் அவரது கட்சி நிர்வாகிகள் பலரும் பல்வேறு கோயில்களில் அவருக்காக சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர் இதன் ஒருபகுதியாக தருமபுரியில் அதியமான் கோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தக்ஷணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் தொண்டர்களுக்கும் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக செயலாளர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags
தருமபுரி