பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் உழைக்கும் மக்களின் கோரிக்கைளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

பென்னாகரம் நவ 29-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஏஐடியூசி தொழிற்சங்கத்தில் உள்ள கட்டிட தொழிலாளர் சங்கம், எலக்ட்ரிசியன் தொழிலாளர் சங்கம், வி.தொ.ச மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கங்கள் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஜதொழிவாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26000 வழங்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். படித்த இளைஞர்களுக்கு தகுதிகேற்ற வேலையை உருவாக்க வேண்டும் கட்டுமான தொழிலாளிக்கு ஓய்வூதியம் மாதம் 6.000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட உழைக்கும் மக்களின் கோரிக்கைளை நிறைவேற்ற கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த தர்ணா போராட்டத்திற்கு தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் எம்.வி.குழந்தைவேல் தலைமை வகித்தார்.தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்கம் மாவட்ட துணை தலைவர் ஏ.முருகேசன், தமிழ்நாடு ஏஐடியூசி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.சிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு ஏஐடியூசி மாநில துணைத்தலைவரும், தர்மபுரி மாவட்ட பொதுச்செயலாளருமான கே.மணி தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் ஏ.சி.மணி,மாவட்ட துணை செயலாளர் ஆர்.சுதர்சனன், உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் என்.மனோகரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சி.சிவன் ஆகியோர் பேசினார்கள்.

இறுதியாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் எம்.மாதேஸ்வரன் சிறப்புரையாற்றி நிறைவு செய்தார்.

இந்த தர்ணா போராட்டத்தில் எம்.ராஜ்,பி.முனியம்மாள், பெருமா, முத்தம்மா, சண்முகம், அர்ச்சுணன், சந்திரன், பாலகிருஷ்ணன், அப்பாதுரை, மகேஸ்வரி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال