ஊரே திரண்டு வந்து மாவட்ட
ஆட்சியரிடம் புகார் மனு..
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேவுள்ள பெலமாரனஅள்ளி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலவலகத்திற்கு புகார் கொடு்க்க திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
இது குறித்து சம்மந்தபட்ட கிராம மக்கள் கூறும்போது பெலமாரனஅள்ளி, செம்மனஅள்ளி,ஆமிதனஅள்ளி, காந்திநகர், காட்டு கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருவதாகவும், தங்களது கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில், செல்லியம்மன் கோவில், பெருமாள் கோவில்,பைரவர் கோவில் காகன் கோவில் என கோவில்கள் அமைந்துள்ளதாகவும், ஊருக்கு பொதுவாக காலம் காலமாக கோவில் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வந்த மண்டு நிலத்தினை தற்போது ஆமிதனஅள்ளி கிராமத்தை சேர்ந்த 40 க்கும் மேற்பட்டோர் குடிசை போட்டு ஆக்கரமித்து கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்றி கோவில் திருவிழாக்கள் நடத்திடும் வகையில் மண்டு நிலத்தை மீட்டு தரவேண்டு்ம் என மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்திருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
Tags
தருமபுரி