பென்னாகரம் டிச 5-
பாப்பாரப்பட்டியில் முன்விரோதம் காரணமாக விவசாயி தாக்கியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே செக்காரப்பட்டி பகுதியை சேர்ந்த பப்புன் மகன் காளியப்பன் (80) விவசாயி. இவருக்கும், உறவினர்களான மாங்காப்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணப்பன் (54), பிரபாகரன் (27), வாசுதேவன் (33) ஆகிய மூவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்த காளியப்பனிடம், கண்ணப்பன் பிரபாகரன் வாசுதேவன் ஆகிய மூவரும் தகராறில் ஈடுபட்டு இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காளியப்பனை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் தகராறு ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவான மூவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags
தருமபுரி