வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தர்மபுரி கோட்டை அருள்மிகு வரமகாலட்சுமி உடனமர் பரவாசுதேவ சுவாமி திருக்கோவில் உட்பட தருமபுரியில் பல்வேறு பெருமாள் கோவில்களில் சனிகிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
தருமபுரி கோட்டை அருள்மிகு வரமகாலட்சுமி உடனமர் பரவாசுதேவ சுவாமி திருக்கோவில் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன.
இதைத்தொடர்ந்து 4.30.மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பரவாசுதேவ சுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியே வழிபட்டனர். இதைத் தொடர்ந்து பல்லக்கில் சாமி திருவீதி உலா நடைபெற்றது . இதில் தருமபுரி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சொர்க்க வாசல் வழியாகத் சென்று சுவாமியை வழிபட்டனர்.
இந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீ வாரி சேவா சங்கம் சார்பில் லட்டு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி மாது, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கௌதமன், திருக்கோவில் செயல் அலுவலர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் குமாரசாமிபேட்டை சென்னகேசவ பெருமாள் கோவில், கடைவீதி அருள்மிகு பிரசன்னா வெங்கடேஸ்வர சுவாமி கோவில், மூக்கனூர் ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில், அதியமான் கோட்டை சென்றாய பெருமாள் கோவில் , அதகப்பாடி ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி திருக்கோவில், ஆட்டுக்காரன்பட்டி ராதே கிருஷ்ணர் திருக்கோவில் உட்பட தருமபுரி நகரம் மற்றும் புறநகர பகுதிகளில் உள்ள பெருமாள் திருக்கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் அதிகாலை முதலே ஏன்டா வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர்.
Tags
தருமபுரி