அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எழுத்தாளர் தேவிபாரதி என்.ராஜசேகரன் நேரில் சந்தித்து பொன்னாடை அனிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திருப்பூர், டிச.27-

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவிபாரதி என்.ராஜசேகரன் எழுதிய "நீர்வழிப்படூஉம்" என்ற நாவலுக்கு சாகித்யா அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மு.பெ.சாமிநாதன் எழுத்தாளர் தேவிபாரதி திரு.என்.ராஜசேகரன் நேரில் சந்தித்து பொன்னாடை அனிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவிபாரதி என்.ராஜசேகரன் எழுதிய "நீர்வழிப்படூஉம்" என்ற நாவலுக்கு சாகித்யா அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து. நேற்று (26.12.2023) திருப்பூர் மாவட்டம். காங்கேயம் வட்டம். புது வெங்கரையாம் பாளையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மு.பெ.சாமிநாதன் எழுத்தாளர் தேவிபாரதி என்.ராஜசேகரன் நேரில் சந்தித்து பொன்னாடை அனிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது, இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ஒன்றிய அரசின் சார்பில் எழுத்தாளர் தேவிபாரதி என்கின்ற .என்.ராஜசேகரன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கான விருதுக்கு ராஜசேகரன் எழுதிய நீர்வழிப்படூஉம்' நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எளிய மனிதர்களாகிய நாவிதர் சமூகத்தின் வாழ்வியலை தன்னுடைய 'நீர்வழிப்படூஉம்' என்ற இந்த நாவல் மூலம் பதிவு செய்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எளிய மக்களின் வாழ்வியலை எதார்த்த நடையில் எழுதி வரும் ராஜசேகரன் ஏற்கெனவே நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ்ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். தற்போது சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ள 'நீர்வழிப்படூஉம்' இவரது மூன்றாவது நாவலாகும்.

"நீர்வழிப்படூஉம்" சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு
தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும்
உறவைச் சித்தரிக்கிறது இந்நாவல். நொய்யல் ராஜசேகரன் அவர்களின் நாவல்களில் இறுதியாக வெளிவந்தது. நொய்யல் ஆற்றை மையமாகக் கொண்டு
கொங்கு வட்டாரத்தின் பண்பாட்டு மாற்றங்களைச் சித்தரிக்கும் படைப்பாக அமைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் புதுவெங்கரையாம் பாளையத்தில் 1957-ம் ஆண்டு பிறந்தவர். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் ஏறத்தாழ கவிதைகள், சிறுகதைகள் அதே போல நாவல்கள் என்ற வகையில் 40 படைப்புகளை தந்துள்ளார்கள். இது பாராட்டுக்குறியதாகும். அதே போல நொய்யல் கரையையொட்டி அவர் வாழ்ந்து வருவதால் நொய்யலை பற்றி ஒரு நாவலை எழுதினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதினை வழங்கினார்கள்.

1980 களில் சிறுகதைகள் மூலம் அறிமுகமான தேவிபாரதி தொடர்ந்து சிறுகதைகள்,கவிதைகள், அரசியல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள். எழுதிவருபவர். 1993-ல் வெளிவந்த இவரது சிறுகதைத் தொகுப்பு 'பலி' பரவலான கவனம் பெற்றது. இவரது படைப்புகளில் பலி, பிறகொரு இரவு, 'கறுப்பு வெள்ளைக் கடவுள்'. 'வீடென்ப' ஆகிய நான்கு சிறுகதைத் தொகுதிகளும் 'நிழலின் தனிமை', 'நட்ராஜ் மகராஜ்'. 'நீர்வழிப்படூஉம்' ஆகிய நாவல்களும் தமிழ் நாவல்களில் முக்கியமானவையாகத் திகழ்ந்து வருபவை. புழுதிக்குள் சில சித்திரங்கள்', 'அற்ற குளத்து அற்புத மீன்கள்' என இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த இவரது 'நொய்யல்' நாவல் தமிழ் படைப்பிலக்கியத்தின் முக்கியமாக கருதப்படுகிறது.

நம்முடைய திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த எழுத்தாளர் சாகித்யா அகாடமி விருது பெறுவது மாவட்ட மக்களுக்கும் பெருமையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. விருது பெறவுள்ள எழுத்தாளர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சார்பிலும், எனது சார்பிலும், மாவட்ட மக்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 
இவ்வாறு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
Previous Post Next Post

نموذج الاتصال