மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த் அஞ்சலி செலுத்திய கோவை பா.ஜ.க.வினர்

கோயம்புத்தூர் டிச 29-

கோவை, சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் தே.மு.தி.க தலைவரும், நடிகருமான விஜய்காந்த்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பா.ஜ.க மாவட்ட தலைவர் J.ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. 

இதில் மாநில துணை தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பற்றி பா.ஜ.க மாவட்ட தலைவர் பேசும்போது :-

உண்மை வாழ்வில் நடிக்கத் தெரியாத ஒரு நல்ல மனிதர். சமூக அவலங்களை திரைப்படத்திலும் நிஜ வாழ்விலும் தட்டிக் கேட்ட துணிச்சல் மிக்க நபர். பசி என்று தன்னை அணுகி வரும் யாரும் இருந்து விடக் கூடாது என்று எந்த நேரத்திலும் வந்தவருக்கு உணவு விட்டு மகிழ்ந்தவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாது அவருக்கு.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பா.ஜ.க சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். என்று பேசினார். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال