பாப்பிரெட்டிப்பட்டி டிச 29-
கடத்தூர், கம்பைநல்லூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு அபராதம் மற்றும் சீல்.
தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் ஆலோசனைப்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு அபராதம் மற்றும் கடை செயல்பட தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட மளிகை மற்றும் பெட்டி பீடா கடைகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பரிந்துரை பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானு சுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் உத்தரவின் பெயரில் கடத்தூர் மற்றும் கம்பைநல்லூர் பகுதிகளில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் முருகன் உடன் கடத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், மற்றும் சாமிதுரை உள்ளிட்ட குழுவினர் கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடத்தூரில் ஒரு மளிகை கடை, தாளநத்தம் பகுதியில் ஒரு பெட்டி பீடா கடை மற்றும் கம்பைநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கதிர்நாயக்கனள்ளி அஞ்சல் குண்டல்பட்டியில் ஒரு பெட்டி கடை உடன் கம்பைநல்லூரில் செம்மணள்ளி ரோடடில் ஒரு மளிகை கடை என ஒரே நாளில் மொத்தம் நான்கு கடைகளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு கடைகள் மூடி கடை செயல் பட தடை விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை கடை திறக்க கூடாது என எச்சரித்து கடை சாவியை எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
Tags
தருமபுரி