இடுப்பில் சாகச வளையத்தை சுற்றி கொண்டே உடை மாற்றுவது, கேம் விளையாடுவது என அசத்தும் சிறுவன்


கோயம்புத்தூர் டிச 30-

கோவையில் பதினோரு வயது சிறுவன்,  ஹூலா ஹூப் எனும்  சாகச வளையத்தை  சுற்றி கொண்டே, வீடியோ கேம்,விளையாடுவது, உடை மாற்றுவது, நடந்து செல்வது  என பல்வேறு செயல்களை செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்…


கோவை சாய்பாபாகாலனி பகுதியை  சேர்ந்த அசோக்,ரஞ்சனி ஆகிய தம்பதியரின் மகன்  ஆரவ்,பதினோரு வயதான இவர், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்..சிறு வயது முதலே  ஹூலா ஹூப் எனும் சாகச வளையம் சுற்றுவதில் ஈடுபாடு கொண்ட இவர்,, சாகச வளையத்தை சுற்றி கொண்டே பல்வேறு செயல்களை செய்வதை  வழக்கமாக கொண்டுள்ளார்.இவரது அரிய திறமையை கண்ட இவரது பெற்றோர்,இவருக்கு அளித்த பயிற்சியின் காரணமாக தற்போது கோவை வந்த சிறுவன் ஆரவ்,இடுப்பில் வளையத்தை சுற்றுவதில் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் படி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள அவரது தாத்தா வீட்டில் நோபல் உலக சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர் சிவ முருகன் முன்னிலையில்,உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.இதில் சிறுவன் ஆரவ் இடுப்பில் வளையத்தை சுற்றி கொண்டே,உடை மாற்றுவது,தண்ணீர் குடிப்பது,க்யூபிக் சரி செய்வது,வீடியோ கேம்,செஸ் என பத்துக்கும் மேற்பட்ட செயல்களை செய்தார்.இதில் அவரது குடும்பத்தினர் மற்றும் சகோதரி வசுப்பிரதா ஆகியோர் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்..ஆரவ்   செய்த இந்த சாதனை முயற்சி  சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது…
Previous Post Next Post

نموذج الاتصال