தருமபுரி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி

தருமபுரி டிசம்பர் 2-

தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆலோசனைப்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மேற்பார்வையில் குழுக்கள் உருவாக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் , அபராதம் மற்றும் கடை செயல்பட தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. 
அதன் ஒரு பகுதியாக இன்று (2.12.2023)  மொரப்பூர் ஒன்றியம் , கம்பைநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கம்பைநல்லூர், இருமத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில் , மொரப்பூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் கம்பைநல்லூர் காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஹரிச்சந்திரன் மற்றும்  காவலர்கள் சாமிதுரை, பட்டாபி உள்ளிட்ட குழுவினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கம்பைநல்லூர் இருமத்தூர் சாலை ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு பீடா கடை, வகுரப்பம்பட்டியில் இரண்டு மளிகை கடைகள் மற்றும் இருமத்தூரில் பள்ளி அருகில் ஒரு பெட்டி கடை மேலும் மருதுபட்டி சாலை சுண்டைக்காய் பட்டியில் ஒரு மளிகை கடை என ஐந்து கடைகளில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து கம்பைநல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. செந்தில் குமார் பரிந்துரை பேரில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, அவர்கள் உத்தரவின் பெயரில் கடைகள் மூடி கடை செயல் பட தடை விதித்து நோட்டீஸ் வழங்கியதுடன் முதல் தகவல் அறிக்கை பதிந்த மூன்று கடைக்காரர்கள் தவிர்த்து முதல் முறையாக பிடிபட்ட சுண்டக்காய்பட்டி மளிகை கடைக்காரருக்கும் கம்பைநல்லூர் ஜங்ஷன் பகுதியில் மீண்டும் மீண்டும் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்த பீடா கடைக்காரர்க்கும் முறையே தலா ஐந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது . மறு உத்தரவு வரும் வரை கடை திறக்க கூடாது என எச்சரித்து கடை மூடி,கடை கதவில் நோட்டீஸ் ஒட்டி சாவியை எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் என காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.
Previous Post Next Post

نموذج الاتصال