தருமபுரி டிசம்பர் 13-
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலாத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக சுற்றுலா துறை முதன்மை செயலாளர் மற்றும் சுற்றுலா ஆணையர் காக்கார்லா உஷா நேரில் பார்வையிட்டு ஆய்வு.
தமிழக அரசு சுற்றுலா தலங்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலம் மிகவும் பிரபலமானது. இந்த சுற்றுலா தலத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தை சர்வதேச அளவில் மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதன் அடிப்படையில் சுமார் ரூபாய் 17 கோடியே 57 லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 3.10 ஏக்கர் நிலம் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நுழைவாயில், பார்வையாளர் மாடம், பரிசல் நிறுத்துமிடம், எண்ணெய் குளியலுக்கான இடங்கள், உடைமாற்றும் அறை மற்றும் பாதுகாப்புடன் குளிக்க வசதி ஏற்படுத்துதல், டிக்கெட் கவுண்டர், , பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, ஆழ்துளை கிணறு, உணவகம், சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம், காட்சி கோபுரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது முதல் கட்டமாக நடைபெற்று வரும் பணிகளை இன்று தமிழக சுற்றுலா துறை முதன்மை செயலாளர் மற்றும் சுற்றுலா ஆணையர் காக்கார்ல உஷா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பென்னாகர சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி ஒகேனக்கல் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் இப்பணிகளை விரைவாக முடித்து சுற்றுலா பயணிகள் பயன்படுத்த வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இரண்டாம் கட்டமாக தொடங்க உள்ள சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கதிரேசன், ஒகேனக்கல் தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் உதயசங்கர் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Tags
தருமபுரி