தமிழக முழுவதும் 50 நாட்கள் 50 இலட்சம் கையெழுத்து வாங்குவது என திமுக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மாவட்ட கழக செயலாளர்கள் தலைமையில் அனைத்து மாவட்டத்திலும்
நீட் தேர்வுக்கு எதிராக ஆன்லைன் மற்றும் அட்டை வடிவிலும் கையெழுத்துப் பெற்ற வருகின்றனர்.
தர்மபுரி கிழக்கு மாவட்ட இளைஞரணி திமுக சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் நேற்று தருமபுரி அரசு கலைக் கல்லூரி முன்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், இளைஞர் அணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன்,
துணை அமைப்பாளர் என்.எஸ்.கலைச்செல்வன், முன்னாள்
ஒன்றிய செயலாளர் துரைசாமி, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் தடங்கம் இளைய சங்கர், ஹரிவிக்னேஷ், கௌதம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் துரைசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மாரி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி ராஜ், ஒன்றிய துணை செயலாளர் ரங்கநாதன், தர்மபுரி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கவின்குமார், அன்பு, ஐடி விங் ரகு, முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கெ எண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்ட 5000 அட்டைகளை நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் முன்னிலையில் மாவட்ட கழக செயலாளர் திரு தடங்கம் பெ.சுப்ரமணி Ex.MLA அவர்களிடம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.பி.முத்தமிழன் ஒப்படைத்தார்.
Tags
தருமபுரி