தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சாந்தி துவக்கி வைத்தார்

தருமபுரி டிசம்பர் 18-

அரசின் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் மக்களை சென்றடையவும், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்தவும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து இன்று கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று 30 தினங்களுக்குள் தீர்வு காணும் வகையில் முதற்கட்டமாக நகர்புற பகுதிகளுக்கான தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் இன்று நகராட்சிகுட்பட்ட மதிகோண் பாளையத்தில்  உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 1 முதல் 6 வார்டுகளுக்கான முகாமினை மாவட்ட ஆட்சியர் சாந்தி துவக்கி வைத்தார். 

இந்த முகாம் இன்று முதல் வருகிற 27ம் தேதி வரை நடைபெறும். இம்முகாமில் வருவாய்துறை, மின்சார வாரியம், நகராட்சி துறை, மாற்று திறனாளிகள் நலதுறை உள்ளிட்ட 13 துறை அலுவலர்கள் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். இன்று நடைபெற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
 

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான தடங்கம் சுப்ரமணி நகர்மன்ற தலைவர் லட்சுமி மாது, நகராட்சி ஆணையர் புவனேஸ்வர், கோட்டாட்சியர் கீதாராணி, நகரமன்ற துணைத்தலைவர் நித்யா அன்பழகன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
Previous Post Next Post

نموذج الاتصال