தருமபுரி டிசம்பர் 18-
பத்திரிகையாளர்களுக்கு அளித்த தேர்தல்வாக்குறு திகளைநிறை
வேற்ற வேண்டும். தாலுக்கா செய்தியாளர்களையும் பத்திரிகையாளர் நலவாரியத்தில் இணைக்க வேண்டும்.
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில நிர்வாக குழுக் கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்வாரிய ஊழியர்கள் அலுவலக விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பி. எஸ். டி.புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
மாநில நிர்வாகிகள்கள துணைத் தலைவர் பி. சண்முகவேலு, பொதுச் செயலாளர்கள் போளூர் A. சுரேஷ் கே.முத்து, பொருளாளர் வி.ரவிச்சந்திரன், துணைப் பொதுச் செயலாளர் எஸ். டேவிக்குமார், அமைப்புச் செயலாளர்கள், ஏ. தமிழ்ச்செல்வன், பி ஆர் வேளாங்கன், இணைச் செயலாளர் ஏ ஆர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் பொதுச் செயலாளர் போளூர் A. சுரேஷ் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். பின்னர் மாநில நிர்வாகிகளின் கருத்துரைகளுக்குப் பின்னர் மாநிலத் தலைவர் தலைமை உரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவருமான தோழர் என். சங்கரையா அவர்களின் மறைவுக்கும், மாநில பொருளாளர் திரு ரவிச்சந்திரன் துணைவியார் திருமதி வசந்தி அவர்களின் மறைவிற்கும், திருவாருர் மாவட்ட பொருளாளர் திரு பாரி அவர்கள் மறைவிற்கும், சென்னை நிர்வாகி திரு ஜெயராஜ் அவர்களின் தந்தையார் திரு ரத்னம் அவர்களின் மறைவிற்கும், சென்னை,இந்து போட்டோகிராபர் திரு குமரேசன் மறைவிற்கும், சமூக ஆர்வலர் திருமதி சுசீலா மறைவிற்கும் மற்றும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களுக்கும் இக்கூட்டம் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் தாலுகா செய்தியாளர்களையும் இணைப்பது உள்ளிட்ட பத்திரிகையாளர் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் செய்தியாளர்கள் மீது செய்தி வெளியீடு சம்பந்தமாக தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருப்பதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
பாதிக்கப்படும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அரணாக டியுஜெ எப்போதும் செயல்படும் என இக் கூட்டம் உறுதி அளிக்கிறது.
மிக்ஜாம் புயலின் போது வடசென்னை பகுதியில்மழை நீர் தேங்கியிருந்த பகுதிகளில்,உரிய
நிவாரண பணிகளை செய்யாததால்,
மக்கள் படும் அவதிகுறித்து விரிவான செய்தி சேகரித்து வெளியிட்ட மூத்த ஊடகவியலாளர், சென்னை பத்திரிகையாளர்கள் சங்க பொதுச்
செயலாளர்,நியூஸ்மினிட்ஆசிரியர் தோழர் சபீர் அகமது,அவர்களையும், இந்தியா டுடே, பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியம் ஆகியோருக்கும் மிரட்டல் விடுத்த ஆளுங்கட்சி ஐ டி விங் செயல்பாட்டாளர்களுக்கும் இக்கூட்டம் வன்மை யான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் ஆளும் கட்சியின் தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின்
அவர்கள் பத்திரிகை, ஊடக
வியளர்களுக்கு கொலை மிரட்டல்
விடுத்த நபர்கள் மீது உரிய
நட வடிக்கை எடுக்கவேண்டும்
என கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
மேலும் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை பகுதி மக்களை சந்தித்து செய்திகளைசேகரிக்க சென்ற புதிய தலைமுறை
செய்தியாளர் சாந்தகுமாரை
தடுத்து தாக்கிய பள்ளிகரணை காவல்துறை துணை ஆய்வாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டம்வலியுறுத்துகிறது.
திமுக அரசு பத்திரிகையாளர்களுக்கு அளித்த தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும்.தேதி
பின்னர் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்
2024 ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவாரூர், மாவட்டங்களில் பேரவை கூட்டங்கள் நடத்தப்படும் இக்கூட்டம் முடிவு செய்கிறது
நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் மூன்று வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மாநில மையம் மேற்கொண்டு வருகிறது. அதற்கு இந்த மாநில குழு முழு ஆதரவை தெரிவிக்கிறது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் (காஞ்சிபுரம், செங்கல்பட்டு) மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நிலத்திற்கு உண்டான மதிப்புத்தொகையை பெற்றுக் கொண்டு ஒதுக்கப்பட்ட வீட்டுமனை இடங்களை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மீண்டும் அந்த இடத்தை செய்தியாளர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று கூட்டம் வலியுறுத்துகிறது.
மாநிலம் முழுவதும்
பல்வேறு மாவட்டங்களில்
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் செய்தி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்தியாளர்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதை இக் கூட்டம்வன்மையாக கண்டிக்கிறது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள்,தங்கள் போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவர்கள் கண்டித்து மாவட்ட ரீதியாக போராட்டம் நடத்த படும் என இக் கூட்டம் முடிவு செய்கிறது.
திருக்கோவிலூர்
பகுதியில்,நடைபெறும்சமூக விரோத செயல்
பாடுகள் சம்பந்தமான செய்திகளை வெளியிட்டதற்காக மாநில துணைப் பொதுச் செயலாளர் டேவிட் குமார் மீது நகராட்சி தலைவர் அளித்த பொய் புகார் மீது திருக்கோவிலூர் காவல்துறையினரால் பொய்வழக்கு
பதிவு செய்ததை, இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும்,பொய் வழக்கை வாபஸ் வாங்க கூட்டம்வலியுறுத்துகிறது.
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்ட முடிவில்,சென்னை மாவட்ட மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி ராஜேந்திரகுமார் நன்றி கூறினார்.
Tags
தருமபுரி