ஒகேனக்கல் டிசம்பர் 9-
தருமபுரி ஒகேனக்கல் கணவாய் பகுதியில் டூரிஸ்டு பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து - 59 பேர் சென்றதில் ஏழு பேருக்கு மட்டும் பலத்த காயம் - பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் அடுத்த கோண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழுப்புரம், கடலூர், திருக்கோவிலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ ஊழியர்கள் என அனைவரும் குடும்பத்துடன் 59 பேர் இன்று காலை டூரிஸ்ட்டு பஸ்ஸில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சென்றனர்.
ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உட்பட்ட சாலையில் ஆஞ்சிநேயர் கோவில் அருகே பேருந்து சென்றுக்கொண்டிருந்த பொழுது பிரேக் பிடிக்காததால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதை அறிந்த ஓட்டுநர் சாலையின் இடது புறமும், வலது புறமாக இயக்கி வேகத்தை கட்டுப்படுத்தியுள்ளார். இருப்பினும் பேருந்து கணவாய் பகுதியில் மோதி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த காவல் துறை, தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்க்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமணைக்கு அனுப்பிவைத்து அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் அரசு மருத்துவர் உட்பட ஐந்து பேருக்கு படுகாயம் ஏற்பட்டு 30 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தால் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உட்பட்ட சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Tags
தருமபுரி