தருமபுரி பிப் 16-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சியின் வாயிலாக "மக்களுடன் முதல்வர்" திட்டப் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று 827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சியின் வாயிலாக "மக்களுடன் முதல்வர்" திட்டப் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் இன்று 827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் சென்று சேர நடைமுறைப்படுத்தப்பட்ட "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது தீர்வுகாணப்பட்ட பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இன்றைய தினம் வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தருமபுரி நாகரட்சியின் சார்பில் 161 பயனாளிகளுக்கு தெருவோர வியாபாரிகள் கடன் உதவிகள், சொத்து வரி பெயர் மாற்றம், சொத்து வரி நிர்ணயம் செய்தல், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட ரூ.20,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் பேரூராட்சிகளின் துறையின் சார்பில் 67 பயனாளிகளுக்கு சொத்து வரி பெயர் மாற்றம், சொத்து வரி நிர்ணயம் செய்தல், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகளும், மின்சாரத்துறையின் சார்பில் 145 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம், புதிய மின் இணைப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வருவாய் துறையின் சார்பில் 166 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதிசான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும்,
ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு சலவைப்பெட்டிகள், தையல் இயந்திரம் என ரூ.1.41 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க கடன் உதவிகளும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு 28,800/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு 68,160/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 43 பயனாளிகளுக்கு காதொலிகருவிகள், செயற்கைக்கால், வங்கி கடன் உதவிகள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி உள்ளிட்ட ரூ.6.22 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 200 பயனாளிகளுக்கு ரூ.50,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தனிநபர் கோரிக்கை மனு 2878, பல்வகை மனு 11042 ஆக மொத்தம் 13920 மனுக்களில் ஏற்பளிக்கப்பட்ட 5264 மனுக்களில் சுமார் 827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் திரு.டி.தழிழ்செல்வன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி பவித்ரா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சையது ஹமீத், ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.சாகுல் அமீத், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு. சையது முகைதீன் இப்ராகிம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, தருமபுரி நகராட்சி ஆணையாளர் திரு.சோ.புவனேஸ்வரன், நகர்மன்ற துணைத்தலைவர் திருமதி.அ.நித்யா, தடங்கம் ஊராட்சி மன்றத்தலைவர் தருமதி.கவிதா முருகன் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags
தருமபுரி