ஒகேனக்கல் பிப் 18-
ஒகேனக்கல் தேசநாதஸ்வரன் ராஜகோபுர பணி அடிக்கல் நாட்டல் காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த நிலையில் ஒகேனக்கல் தேசநாதஸ்வரர் ஆலய ராஜ கோபுர பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கட்டிட பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ள தேச நாதேஸ்வரர் கோயிலில் ரூ.1.22 புதிய ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வே.சபர்மதி, குத்துவிளக்கேற்றி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இதில் கோயில் செயல் அலுவலர் ஜீவானந்தம், தக்கார் பா.சங்கர், உதவி செயற்பொறியாளர் ரங்கநாதன், உதவி பொறியாளர் ராமச்சந்திரன், கோயில் அர்ச்சகர் ராமச்சந்திரன், உதவியாளர் மாரிமுத்து, மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags
தருமபுரி