தருமபுரி - மாதேமங்கலம் ஊராட்சி வெங்கட்டம்பட்டியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா 500 தென்னை மரக்கன்றுகள் வழங்கல்

தருமபுரி மார்ச் 4-

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் வெங்கட்டம்பட்டியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு 500 தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட சுற்றுச் சூழல் அணி சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் தடங்கம் சு.இளையசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட‌ துணை அமைப்பாளர்‌ கி.தீர்த்தராமன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவிற்கு 
 நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.சண்முகம்‌ , மாவட்ட பொருளாளர் தங்கமணி உள்ளிட்டோர் முன்னிலை  வகித்தனர்.

இந்த விழாவில் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர்,முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் தடங்கம் பெ.சுப்ரமணி பங்கேற்று முன்னதாக பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன தொடர்ந்து பொதுமக்களுக்கு 500 தென்னை மரக்கன்றுகளை வழங்கி உரையாற்றினார். 

இந்த விழாவில், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம், மாவட்ட‌ இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.பி.முத்தமிழன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர்கள் மாரி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் நவீன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் வினோத்,
பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இரா.சரவணனக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாளை ந.அன்பழகன், தருமபுரி மேற்கு ஒன்றிப் பொருளாளர் தண்டபாணி, நிர்வாகிகள் சிவக்குமார், சித்தன், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال