தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாபெரும் கபாடி போட்டி

நல்லம்பள்ளி மார் 5-

தர்மபுரி மாவட்டம்  நல்லம்பள்ளி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட சாமிசெட்டி பட்டியில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் 71- வது  பிறந்த நாளை முன்னிட்டு சாமி செட்டிபட்டி ஊராட்சியில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் எஸ்.கே.துரைசாமி அவர்கள் தலைமையில் அக்னி பிரதர்ஸ்  குழு சார்பில் 36 அணிகள் பங்கு பெற்ற கபாடி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிக்கு நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய கழக செயலாளர் கே.பி. மல்லமுத்து முன்னிலை வகித்தார்.
இந்த விளையாட்டு போட்டியில் முதல் பரிசு அக்னி பிரதர்ஸ் அணியும் , இரண்டாம் பரிசு எஸ்.கே.புதூர் அணியும்,  மூன்றாம் பரிசு மாரன்டஹள்ளி அணியும், நான்காம் பரிசு அணியும் சேலம் வெற்றி பெற்றது வெற்றி பெற்ற அணிகளுக்கு  மாவட்ட சுற்றுச்சூழணி அமைப்பாளர் தடங்கம் இளைய சங்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் என்.பி. பெரியண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார் மற்றும் தங்கம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பர்குணன், சோலை வேலு, சக்திவேல், சின்ன சாமி, ராஜா டெய்லர், முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال