தருமபுரி மார்ச் 1-
பண வசூலை தடுக்க
ஆன்லைன் முறை புதிதாக அறிமுகம்..
தருமபுரி மாவட்டம் சோகத்தூர் கிராமத்தில் வீரத்தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை என்ற அமைப்பினர் கடந்த 24.2.24 ம்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இருப்பதாக நோட்டிஸ் அச்சடித்து விளம்பரம் செய்திருந்தனர், கடந்த வருடம் இதே விழாக்குழுவினர் சோகத்தூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியபோது, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வந்த காளை மாடுகளுக்கு நன்கொடை என்ற பெயரில் டோக்கன் போட்டு காளைகளுக்கு பணம் வசூலித்தை கண்டுபிடித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் கடுமையாக எச்சரித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்கி உரிய நடவடிக்கை எடுத்திருந்தது..
இந்த நிலையில் சர்ச்சையில் சிக்கிய அதே வீரத்தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை இந்தாண்டும் ஜல்லிகட்டு போட்டி நடத்துவதாக அறிவித்திருந்தது, காளை மாடுகளுக்கு டோக்கன் போட்டு பணம் வசூலித்து வந்தது, ஜல்லிக்கட்டு போட்டிக்கு திருட்டு மின்சாரம் எடுத்தது உள்ளிட்ட அரசின் விதிகளை மீறி பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக தமிழர்களின் வீர விளையாட்டை வியாபாரம் ஆக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டது, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்களேவே செல்ல கடந்த 24.2.24 ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டிற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை,
இத னை தொடர்ந்து 29.2.24 யான இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் என விழாக்குழு அறிவித்திருந்து, ஜல்லிக்கட்டு நடைபெறும் என கூறப்படும் இடத்தில் குடியிருப்புகள் இருப்பது, போதூமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது, திருட்டு மினசாரம் எடுத்தது,ஜல்லிக்கட்டு தொடர்பான அரசு விதிகளை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது, நேற்று (29.2.24) நடக்க இருந்த ஜல்லிக்கட்டிற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வில்லை, இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் இடத்தினை மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டீபன் ஜேசுபாதம், கால்நடைத்துறை, வருவாய்த்தறை, மருத்துவத்துறை, உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்ட பின்னர், ஏற்பாடுகளி்ல் உள்ள குறைபாடுகளை, விழாக்குழுவினருக்கு சுட்டிக்காட்டிய மாவட்ட ஆட்சியர், அதை சரிசெய்யவும், காளைமாடுகளுக்கு பண வசூல் செய்யக்கூடாது, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுக்கூடாது அரசு விதிகளை மீறக்கூடாது, மாலை 4 மணி வர மட்டுமே போட்டி நடத்திட அனுமதி வழங்கிட 600 காளைளுக்கு மட்டுமே குறிப்பாக " ஆன்லைன் " டிக்கட் பெறும் காளைகள் ஜலலிக்கட்டுமே அனுமதி எனவும் எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் விழாக்குழுவினர் பொறுப்பேற்க வேண்டும், அரசு விதிகளை மீறினால் விழாக்குழு மீது வழக்கு பதிவு செய்யப்படும் என நிபந்தனைகளை விதித்து ஜல்லிக்கட்டு நடத்திட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது, ஜல்லிக்கட்டு போட்டி எந்த தேதியில் நடத்துவது என்பதை பின்னர் அறிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் திருமதி சாந்தி தெரிவித்திருக்கிறார்
ஜல்லிகடட்டு போட்டியில் பங்கேற்க வரும் காளை மாடுகளுக்கு நன்கொடை என்ற பெயரில் கட்டாயபடுத்தி பணம் வசூலிப்பதை தடுக்க, ஜல்லிக்கட்டு போட்டியி்ல் பணம் எதுவும் காளை மாடுகளுக்கு"ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் என்ற புதிய முறையும், விழாக்குழவினர் நன்கொடை என்ற பெயரில் காளைகளுக்கு கட்டாய பணம் வசூல் செய்ததற்கு முழுவதும் முற்றுப்புள்ளி வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கும் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் செயல் உண்மையான ஜல்லிக்கட்டு ஆர்வர்லர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
Tags
தருமபுரி