காரிமங்கலம் மார் 2-
தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டி பஞ்சாயத்தில் திமுக இளைஞரணி சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நல்லதம்பி, ஒன்றிய துணை செயலாளர் சித்ரா வடிவேல், பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சங்கர், சமத்துவபுரம் பூபதி, ஆறுமுகம், தங்கராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜய், கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். பெரியாம்பட்டி பஸ் ஸ்டாப்பில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு மற்றும் மற்றும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் காளியப்பன் பாலசுப்பிரமணியன் சீனிவாசன் சுரேஷ் செல்லதுரை பூபதி அருண்குமார் குகன் புகழேந்தி ஆட்டோ ஹரி ராஜ்குமார் ஐடி விங் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாட்லாம்பட்டி, திண்டல், காரிமங்கலம் டவுன் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Tags
தருமபுரி