சேலம் மார்ச் 24-
வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் சேலத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் காவல்துறையினர் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் சேலம் மாநகர காவல் துறை மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் மாநகர துணை கமிஷனர் பிருந்தா அவர்கள் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் அஸ்தம்பட்டி, மணக்காடு, ஜான்சன் பேட்டை, காந்தி ரோடு, வழியாக மீண்டும் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் அருகில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவத்தின் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags
சேலம்