தர்மபுரி ஏப் 25-
தர்மபுரி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் கிராமபஞ்சாயத்து தேர்வு செய்யப்படுகின்றது.தேர்வு பெறும் கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வருவாய்த்துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட 13 துறைகள் இணைந்து வளர்ச்சி பணிகளை கிராமத்தில் மேற்கொள்கின்றன இந்த ஆண்டு தர்மபுரி வட்டாரத்தில் கோணங்கி நாயக்கன அள்ளி, கே. நடுஅள்ளி, ஆண்டி அள்ளி, செம்மாண்டகுப்பம், வே.முத்தம்பட்டி ஆகிய ஐந்து கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கென்று ஒவ்வொரு கிராமத்திற்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகள் அந்தந்த கிராமப் பொறுப்பு அலுவலர்களை அணுகி திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று தர்மபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.மு.இளங்கோவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags
தர்மபுரி