தருமபுரி ஏப் 25-
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த வெள்ளாளன் கொட்டாய் பகுதியில் அமைந்திருக்கும் கருப்புக்கோட்டை ஸ்ரீ கருப்பு சுவாமி திருக்கோயிலில் 10 ஆண்டு சித்திரை மாதம் பவுர்ணமியை முன்னிட்டு படி அளக்கும் வைபவம் பிடிகாசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நேற் சுவாமிக்கு யாக பூஜை செய்து கொடியேற்றி கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இன்று பலி பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருப்புசுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். பிறகு சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கத்தி மீது நின்றவாறு அருள் வாக்கு அளிக்க பட்டது. அப்போது பூசாரி சுருட்டு பிடித்தவாறும், மது அருந்தியும் அருள் வாக்கு அளிக்கபட்டது. இந்த அருள் வாக்கு மூலம் குடும்ப பிரச்சினை, குழந்தையின்மை, திருமணத்தடை, தொழில் பிரச்சனைகள், பில்லி, சூனியம், ஏவல், காத்து கருப்பு மற்றும் கடன் பிரச்சனைகள், உடலில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் இந்த கருப்புசாமியின் அருள்வாக்கினால் தீர்க்க படுவதாக பக்தர்கள் நம்புவதால் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் இந்த அருள் வாக்கினை பெற தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
Tags
தர்மபுரி