தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான், அழிந்து போயிருக் கிறார்கள் என்று என்று இண்டூர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து, இண்டூர் பஸ் நிலையத்தில் நேற்றிரவு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் வைகுந்தன் வரவேற்றார். கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு, திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அமைச்சர் துரைமுரு கன் பேசியதாவது:
தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசுகிற பிரதமர் நரேந்திர மோடி, திமுகவை துடைத்தெறிய வேண் டும் என்கிறார். வேறொரு கூட்டத்தில் காங்கிரசும் துடைத்தெறியப்பட வேண்டிய கட்சி என்கிறார். இவ்விருகட்சிகளும் தியாகங்களால் வளர்ந்த கட்சியாகும். இந்திய இறையாண்மையை பாதுகாப்பதில் திமுக என்றைக்கும் சமரசம் செய்து கொண்டதில்லை. பங்களாதேஷ் போரின் போது.
திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு. அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு நிதியுதவி அளித்து, துணை நின்றவர் முன்னாள் முதல்வர் அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தொடங்கி, எல்லோருமே மக்கள் நலனுக்காக பாடு பட்டு போராடியவர்கள். ஆகவே திமுகவை அவ்வளவு எளிதில் துடைத்து எறிந்து விட முடியாது. தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த திமுகவை, அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக் கிறார்கள்.
முன்னாள் பிரதமர் நேருவின் தியாகம் அளப்பரியது. இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போதே படுகொலை செய்யப்பட்டார். அவரது மகன் ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டார். இந்த நாட்டுக்காக தொடர்ந்து பல தியாகங்களை செய்தது நேருவின் குடும்பம். இத்தகைய எந்த வரலாறும் இல்லாத கட்சி தான் பாரதிய ஜனதா ஆகும். மக்கள் நலன் காக்கும் போராட்டத்திலே, பிரதமர் மோடியோ அல்லது அக்கட்சியின் தலைவர்களோ சிறைக்கு சென்ற வரலாறு கிடையாது.
தமிழகத்திலே இந்தியா கூட்டணி கட்சிகள் ஓர ணியாகவும், ஓரணியாக இருந்தகட்சிகள் வெவ்வேறு கூட்டணியிலும் போட்டியிடுகின்றன. அதில் ஒரு கட்சி, எதற்காக கூட்டணி மாற்றி அமைக்கிறது என்பதே மக்களுக்கு புரியவில்லை. அந்தக் கட்சியும் தர்மபுரியில் வேட்பாளரை களமிறக்கி யுள்ளது. தேர்தலிலே அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எங்களை பற்றி பேசும் மோடி மக்களுக்காக எதையுமே செய்யவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு. மக்களுக்காக பல்வேறு திட் டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், வர்த்தர் அணி மாநில துணை செயலாளர் தர்மச்செல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், ஆர். சிவகுரு , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் தீர்த்தராமன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் சாக்கன் சர்மா, பாண்டியன், கருப்பண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags
தர்மபுரி