நவீன கண்காட்சி அமைந்திருக்கும் இராஜா அண்ணாமலை மன்றத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்

சென்னை ஜுன் 10-

சென்னை முதல் குமரி வரை நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்வை நம் கண் முன் விரிக்கும் 'காலம் உள்ளவரை கலைஞர்' நவீன கண்காட்சியகத்தை இராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று கண்டு களித்தோம்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மெழுகு சிலை செல்ஃபி பாயின்ட், Virtual Reality தொழில்நுட்பத்துடன் கூடிய கலைஞர் அவர்களின் குறும்படம், அவரது வாழ்க்கையை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சி ஆகியவை கழகத்தின், கலைஞரின், கழகத் தலைவரின் உழைப்பை நம் கண் முன்னே நிறுத்துகின்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கண்காட்சியைக் கண்கொள்ளா காட்சியாக, சிறப்புற ஏற்பாடு செய்த சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான அண்ணன் P.K. Sekar Babu அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்! என்று கழக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை பதிவேடு  நோட்டில் கையெழுத்துயிட்டார்.
Previous Post Next Post

نموذج الاتصال