தருமபுரி ஜுன் 21-
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும்
மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் தருமபுரியும் மற்றும் பி எம் கேந்திரிய வித்யாலயா தருமபுரி இணைந்து இன்று (21.06.2024 ) சர்வதேச யோகா தின சிறப்பு நிகிழ்ச்சியை பி எம் கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்து இருந்தன.
நிகழ்ச்சியில் பி.எம் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் திரு S.D. மீனா தன்னுடைய தலைமையுரையில் யோகா என்பது எளிய முறையில் நோய்களை குணமாக்க கூடியது என்றும் யோகா பயிற்சிகளை தினந்தோறும் செய்துவந்தால் உடல் வலிமையாகவும் மனம் தூய்மையாகவும் மருந்து மாத்திரைகளின் தேவை இருக்காது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் யோகா குறித்து யோகா வல்லுநர் திருமதி P. மலர்விழி மாணவர்களுக்கு எடுத்துரைத்து யோகாசனங்களை செய்து காட்டினார். மாணவ மாணவியர் உற்சாகமாக கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை ஆர்வமுடன் செய்தனர்.
மன்னதாக திரு M. தியாகராஜன், கள விளம்பர உதவியாளர் வரவேற்புரையாற்றினர். நிகழ்ச்சியில் யோகா குறித்த கையேடு வெளியிடப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்திய அரசின் இசை நாடக பிரிவில் பதிவு பெற்ற பாரதி கலை குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இறுதியாக ஆசிரியர் திருமதி கீதா கோபாலன் நன்றியுரையாற்றினார்.