பாலின விகிதம் குறித்து சட்ட விரோதமாக பரிசோதனை செய்த நான்கு பேர் கைது


பென்னாகரம், ஜூன்.29-

பென்னாகரம் அருகே ஏர்ரபையன அள்ளியில் சட்டவிரோதமாக குழந்தைகளின் பாலின குறித்து பரிசோதனை மேற்கொண்டதாக பெண் உள்ளிட்ட நான்கு பேரை மாவட்ட சுகாதார துறையினர் காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகளின் பாலினம் குறித்து ரகசியமாக பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட சுகாதார துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் மாவட்ட சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே எரப்பையன் அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தப்பா நகர் பகுதியில் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது தனியாக உள்ள ஒரு வீட்டில் குழந்தையின் பாலினம் குறித்துசட்டவிரோதமாக பரிசோதனை மேற்கொண்டதாக நான்கு பேரை போலீசாரின் உதவியுடன் பிடித்தனர்.பின்னர் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த முருகேசன் (48), நடராஜன் (40), சின்னராஜ் (28), இண்டூர் பகுதியைச் சேர்ந்த இடைத்தரகர் லலிதா (42) என்பது தெரிய வந்தது.மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை மேற்கொண்டு வந்தது தெரிய வந்தது. பின்னர் இடைத்தரகர் உள்ளிட்ட நான்கு பேரை பென்னாகரம் போலீஸார் கைது செய்தனர்.பின்னர் செய்தியாளர்கள் இடம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் சாந்தி கூறியதாவது: எரப்பையன அள்ளி பகுதியில் கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து பாலின விகிதம் குறித்து சட்டவிரோதமாக பரிசோதனை மேற்கொள்வதாக மாவட்ட மருத்துவ நலப் பணிகள் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் சிறப்பு குழுவினர்,கடந்த சில நாட்களாக இந்த நபர்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் இன்னொரு பகுதியில் இருந்து புரோக்கர் லலிதா என்பவரின் மூலம் ஐந்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண் அழைத்து வரப்பட்டு கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவருடன் நான்கு பேர் கொண்ட குழுவினர் சட்ட விரோதமாக கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிப்பதற்காக இயந்திரத்தின் உதவியிடம் பரிசோதனை மேற்கொள்ளும் போது சிறப்பு குழுவினரால் பிடிக்கப்பட்டனர்.இது போன்ற செயலுக்கு கணவரும் உறுதுணையாக உள்ளதால்,தர்மபுரி மாவட்டத்தில் குறிப்பாக நல்லம்பள்ளி வட்டத்தில் பெண் குழந்தைகளின் விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கலைப்பு கும்பல் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதாக உறுதி அளித்துள்ளனர்.
Previous Post Next Post

نموذج الاتصال