அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து விசிக உறுப்பினர் தர்ணா

 பென்னாகரம், ஜூன்.29-

பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பத்தாவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி வார்டு உறுப்பினர் தர்ணாவில் ஈடுபட்டார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளனர். இதில் திமுக கூட்டணி - 11 அதிமுக - 2, பாமக - 2, தேமுதிக - 2, சுயேட்சை - 1 என வெற்றி பெற்றன. பென்னாகரம் பேரூராட்சி தலைவராக திமுகவை சார்ந்த வீரமணி உள்ளார். மாதாந்திர பேரூராட்சி மன்ற கூட்டமானது அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பத்தாவது வார்டு உறுப்பினரான விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ரேவதி, கூட்டத்தில் தனது வார்டில் உள்ள ஆதி திராவிடர் காலனி சுடுகாட்டிற்கு சுற்றுச்சூழல் அமைத்து தர வேண்டும்,ஆதிதிராவிடர் காலனி சுடுகாடு புது காலனி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும், மின் கம்பங்கள் வசதி,இருளர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாய், புது காலனி பகுதியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கூடிய பலமுறை மனு அளித்திருப்பதாகவும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்து பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட உறுப்பினரிடம், பேரூராட்சித் தலைவர் வீரமணி, தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மனு அளிக்கும் பட்சத்தில், பேரூராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடிப்பதாகவும், இதர பணிகளை 15 வது நிதி குழுவின் மூலம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டு தர்ணாவில் ஈடுபட்ட விசிக வார்டு உறுப்பினர் கலைந்து சென்றார்.
Previous Post Next Post

نموذج الاتصال