காரிமங்கலம் ஆக 15-
காரிமங்கலம் பேருந்து நிலையம் அருகில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இங்கு 16 கடைகள் இருந்த போதும் 8 கடைகள் மட்டுமே தினமும் இயங்குகிறது. உழவர் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள், விவசாயிகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று முதல் 300 ரூபாய் பெறுமான காய்கறிகள் வாங்குபவர்களுக்கு ஒரு
கிலோ தக்காளி அல்லது அரை கிலோ பெரிய வெங்காயம் இலவசமாக வழங்கப்படும்.
இதுகுறித்து உழவர்சந்தை அதிகாரிகள் கூறுகையில், வழக்கமாக வெளிசந்தையை விட உழவர்சந்தையில் காய் கறிகளின் விலை குறைவாக இருக்கும்
தற்போது உழவர் சந்தைக்கு வருகை தரும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து இது தொடரும் என தருமபுரி
வேளாண்மை துணை இயக்குநர் வேளாண் வணிகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags
தருமபுரி