ஆரணி, ஆக 09
ஆரணி அடுத்த வெள்ளூர் கிராமத்தில் உள்ள அரியாத்தா, பூவாத்தா, சோலையாத்தா கோயிலில் புதன்கிழமை ஆடிப்பூர விழா முன்னிட்டு 208 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சந்தவாசல் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் இரண்டாம் ஆண்டு ஆடிப்பூரம் முன்னிட்டு அரியாத்தா, பூவாத்தா, சோலையாத்தா கோயிலில் பெண்கள் விரதம் இருந்து 208 பால்குடம் எடுத்து பம்பை, உடுக்கை மேள தாளத்துடன் மாட வீதி வழியாக ஊர்வலமாக சென்று சுவாமிக்கு பாலபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Tags
ஆரணி