திராவிட மாடல் அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டத்தில் எ.வ.வே. கம்பன் பேச்சு


ஆரணி ஜூலை 24

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரை டெல்லியில் மோடிக்கு பணிவிடை செய்து வருகிறார்கள் என சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றிய திமுகஇளைஞர் அணி சார்பில் நடைப்பெற்ற திராவிட மாடல் அரசின் நான்காண்டுசாதனை விளக்க தெருமுனை கூட்டத்தில் டாக்டர் எ வ . வே கம்பன் பேசினார்.
சேத்துப்பட்டுகிழக்கு ஒன்றிய திமுகஇளைஞர் அணி சார்பில்தும்பூர் கிராமத்தில் கலைஞர் திடலில்முத்தமிழ் அறிஞர்டாக்டர் கலைஞர் 102 வது பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பி. மனோகரன் தலைமை தாங்கினார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சி. ராம் மோகன் ,கலாம் பாஷா, ரஞ்சித், வெங்கடேசன், குமரவேல், புருஷோத்தமன், ஒன்றிய துணை அமைப்பாளர்கள் கோதண்டராமன், சிவகுமார், முருகன், குமார், சீனிவாசன், ஹரிராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் அனைவரையும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அரிகிருஷ்ணன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில்தலைமை கழக பேச்சாளர்கள் கௌசல்யா ,போடி காமராஜ் பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் போளூர் சட்டமன்ற தொகுதி கழக பொறுப்பாளர் டாக்டர் எ.வ .வே கம்பன் கலந்து கொண்டு பேசுகையில்இந்த ஆட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
 நீங்கள் தான் ஆதாரம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தது தான் சாட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போளூர் தொகுதி அதிக வாக்குகள் அளித்த அன்பு சகோதரிகளுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செய்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது மக்களை சந்திக்கின்றது ஆனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரை பாரத பிரதமராக இருக்கும் மோடிக்கு டெல்லி சென்று பணிவிடை செய்து வருகிறார்கள் கடந்த திமுக ஆட்சியில் 7000 கோடி விவசாய கடனை முன்னாள் முதல்வர் கலைஞர் தள்ளுபடி செய்தார் அவர் கட்சி பார்த்துஓட்டு போட்டவர்களுக்குனு செய்யவில்லை ஓட்டு போடாதவர்களுக்கும் தள்ளுபடி செய்தார்.அவர் வழியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்கட்சி ஆளுங்கட்சி என்று பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை,கல்லூரி மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம் தவப்புதல்வன்திட்டமன ரூ. ஆயிரம்வழங்குகிறார்நினைவேதான் மக்கள் இந்த ஆட்சியை ஆயிரம் ஆட்சி என பேசுகின்றனர் என பெருமிதமாக பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் ராஜசேகர், முன்னாள் எம்எல்ஏக்கள் கே. வி. சேகரன், பாண்டுரங்கன், எதிரொலி மணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார் ,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.கே.பாபு, சேத்துப்பட்டு நகர செயலாளர் இரா முருகன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் செல்வராஜன்ஒன்றிய அவைத்தலைவர் தர்மபாலன் துணைச் செயலாளர்கள் மகாதேவன் ,தேவகி பெருமாள் மாவட்ட பிரதிநிதி வேதாந்தம் மகேஷ் விவசாய அணி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் கிளை செயலாளர் கோதண்டம் நன்றி கூறினார்
Previous Post Next Post

نموذج الاتصال