செய்யாறு அருகே அரியூர் ,வெம்பாக்கத்தில் திமுகவின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்:
எம் எல் ஏ ஒ. ஜோதி பங்கேற்பு.
செய்யாறு ஜூலை. 24,
வெம்பாக்கம் ஒன்றியம் அரியூர், வெம்பாக்கம் ஆகிய இடங்களில் திமுகவின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ,செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றியம் அரியூர், வெம்பாக்கம் ஆகிய இடங்களில் திராவிட மாடல் திமுகவின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ஓ .ஜோதி தலைமை தாங்கி ,சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சீ. பார்வதி சீனிவாசன் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஜே சி கே. சீனிவாசன் வரவேற்றார். திமுக பேச்சாளர்கள் இளைய கோபால் ,ஜெயபாரதி ஆகியோர் திராவிட மாடல் அரசின் நான்கு ஆண்டுகால சாதனைகளை விளக்கிப் பேசினர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் புருஷோத்தமன், பகுத்தறிவு இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட ஆதி திராவிட நல குழு தலைவர் கருணாகரன், வழக்கறிஞர் அணி சிட்டிபாபு ,சீதாராமன், விளையாட்டு அணி கபடி ஞானமுருகன் மாவட்ட பிரதிநிதிகள் அய்யனார் ,பெருமாள், சங்கர், பெருமாள் ,தயாளன் ,ஒன்றிய துணை செயலாளர் குணாநிதி,
இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், குமார், துணை அமைப்பாளர்கள் ராமசாமி, சோமசுந்தரம், அரவிந்தன், ஜெயப்பிரகாஷ், ஆனந்தராஜ், ராஜேஷ், வெங்கடேஷ், பாலாஜி, செந்தில் குமார், அன்பழகன், ஐயப்பன் மற்றும் சுப்பிரமணி, ராதாகிருஷ்ணன் ,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.