அரூரில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்,எல்,ஏ நிருபர்களுக்கு பேட்டி
தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம் சார்பில் அரூரில் முப்பெரும் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகைதந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தி யாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதா வது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக காவல்துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது.
தமிழகத்தில் நடைபெறும் காவல் நிலைய மரணங்கள் வருத்தம் அளிக்கிறது இருந்தாலும் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத்தருவதில் தமிழக காவல்துறை சிறந்து விளங்குகிறது.
அரூரில் வேளாண் கல்லூரி அமைப்பது குறி த்து மாவட்ட பொறுப்பு அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக் கல் உபரி நீர் திட்டம் பல ஆண்டுகளாக செயல்படுத்தாமல் உள்ளது.
ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் அனைத்து நீர்ப்பா சன திட்டங்கள் மற்றும் குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற கோரி சில மாதங்களுக்கு முன் சட்ட சபையில் பேசினேன் முதல்வரிடம் எடுத்து
கூறினேன் விரைவில்
திட்டங்களை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வோம்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தேர்தலுக் காக தேர்தல் பணி செய்வதில்லை எப்பொழுதுமே நாங்கள் தேர்தல் பணி செய்து கொண்டுதான் இருக்கிறோம் என கூறினார்
அரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி.பி.வெங்கடேசன், அரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன், அரூர் தெற்கு ஒன்றிய தலைவர் ரவி, அரூர் நகர தலைவர் அசோகன், அரூர் மேற்கு ஒன்றிய பொருளாளர் சிவலிங்கம், அரூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ், அரூர் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கலையரசன், அரூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விஜியக்குமார் அவர்கள், மத்திய மாவட்ட துணை செயலாளர் சந்தோஷ், பொருளாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் விமலன்,சக்தி, தவமணி, மணி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்ட செய்தி(ம) விளம்பர செயலாளர் தருமபுரி(ம) கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் (உள்ளாட்சி ரவுன்ஸ்) ஜி.கே (எ) பி.ஆர்.கோகுல கிருஷ்ணன், அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பஞ்சாயத்து, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.