ஜனவரி மாதம் திருச்சி மாநகரில் பார்க்கவ குலத்தின் என் மக்கள் என் பெருமை மாநாடு



சேலம் ஆக.25-

அகில பாரத பார்க்கவகுல சங்க நிறுவன தலைவர் திருமலை ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
115 ஆண்டு கால தமிழ்நாடு பார்க்கவகுல சங்கம், 15 ஆண்டுகளாக தீவிர சமுதாய பணியாற்றி வரும் பார்க்கவ குல முன்னேற்ற சங்கம், பார்க்கவ குலத்தின் மற்ற சங்கங்களையும் அழைத்து பேசி அவர்களின் தனித்தன்மை கெடாமல் பார்க்கவ குல கூட்டமைப்பு உருவாக்க அனைத்து அமைப்பினர், சங்கத்தினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பார்க்கவ அனைத்து சமுதாய தலைவர்களின் ஒத்துழைப்புடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் திருச்சியில் ஒரு மாநாடு நடத்த அகில பாரத பார்க்கவ குல சங்கம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.
இதற்கு அனைத்து சமுதாய தலைவர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பார்க்கவ குலத்தின் வளர்ச்சி, எழுச்சி, பாதுகாப்புக்கும் முக்கியமான தேர்தல் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும். மேலும் திருச்சியில் அக்டோபர் முதல் வாரத்தில் நிர்வாகிகள் கூட்டம், சங்கத்தின் கொள்கை முழக்கம், சங்கத்தின் கொள்கை பாடல் வெளியீடு, உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், இருபது குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
 
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பார்க்கவகுல சங்க புரவலர் வேந்தர் வெங்கடாச்சல உடையார், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி, இந்திய ஜனநாய கட்சி நிறுவன தலைவர் டாக்டர் பாரிவேந்தர், இளைய வேந்தர் ரவி பச்சமுத்து, லட்சிய.தி.மு.க தலைவரும் பன்முக கலைஞருமான விஜய டி.ராஜேந்தர் உள்பட பல்வேறு கட்சிகளில் பயணிக்கும் முக்கிய தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு திருச்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post

نموذج الاتصال