தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில்65-வது பட்டமளிப்பு விழா!


சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 65-வது பட்டமளிப்பு விழா 30.08.2025, சனிக்கிழமை, காலை 10.35 மணியளவில், கல்லூரி வளாகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. சோனா கல்விக் குழுமங்களின் தலைவர் திரு.சொ.வள்ளியப்பா அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றார். 

திரிவேணி எர்த்மூவர்ஸ் மற்றும் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் திரு.பி.கார்த்திகேயன் அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதல் ஐந்து இடங்களைப் பெற்ற 60 மாணவ மாணவியர் உட்பட 681 மாணவ, மாணவியர்களுக்கு பட்டையச் சான்றிதழ்கள் (Diploma Certificates) வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கல்லூரியின் முதல்வர் Dr.A. கனகராஜ் அவர்கள் தமது உரையில், மாணவ, மாணவிகளுக்கு வருடத்திற்கு 8.5 லட்சம் ஊதியம் பெறும் வகையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், மேலும் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு, 120-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களில் வருடத்திற்கு ரூ.5.00 லட்சம் வரையிலான ஊதியத்தில் 1036-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகள், வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும்,100-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, மாணவர்களுக்கு தொழில் துறை சார்ந்த பயிற்சிகள் சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

கல்லூரியின், தலைவர் திரு.சொ.வள்ளியப்பா, அவர்கள் பட்டமளிப்பு விழாவின் தலைமையுரையில், இக்கல்லூரி 67 வருடங்களாக சிறப்பான கல்வியை வழங்கி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். இக்கல்லூரியில் பயின்ற அனைவரும் தொழிற் கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்று நாட்டின் தலைசிறந்த குடிமகன்களாக திகழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கல்லூரியின் துணைத்தலைவர்கள் திரு.சொக்கு வள்ளியப்பா மற்றும் திரு.தியாகு வள்ளியப்பா ஆகியோர் விழாவில் சிறப்புரையில். மாணவர்கள் வாழ் நாள் முழுவதும் நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், புதுமையான திட்டங்களை ஸ்டார்ட்- அப்ஸ் மூலமாக புதிய தொழில் நிறுவனங்களாக செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து வாழ்த்தினர்.
                                                                                                                                          

                                                                                 
கல்லூரியின், இயக்குனர் திரு. V. கார்த்திகேயன் தமது பட்டமளிப்பு விழா உரையில், தான் பயின்ற இக்கல்லூரி, மாணவர்களுக்கு சிறப்பான தொழில் நுட்பக்கல்வியை வழங்குவதிலும், கட்டமைப்பு வசதிகள், திறன் பயிற்சிகள், காப்புரிமை பெறுதல், ஆராய்ச்சி ஆகியவற்றில் அனைத்து கல்லூரிகளுக்கும் முன்னோடியாக திகழ்கின்றது என்றும், இச்சிறப்பான கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் பெருமைபட வேண்டும் என்றும் பாராட்டினார். மேலும், மாணவர்கள் தாங்கள் வளர்த்துக் கொண்ட அறிவையும், திறமைகளையும் தொடந்து புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், தற்போதைய வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதுமையான கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அறிவுரை கூறி வாழ்த்தினார்.  

இப்பட்டமளிப்பு விழாவில் 791 மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் வருகை புரிந்து பட்டையச் சான்றிதழ்களைப் பெற்றனர். சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவியர், கல்லூரியின் தலைவர், துணைத்தலைவர்கள், முதல்வர், துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال