கடலூர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் ரோட்டரி சங்கம் 121 ம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு வேப்பூர் ரோட்டரி சங்கம் மற்றும் வேப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்பு குறித்து பேரணி நடத்தினார்கள்.
பேரணிக்கு முன்னால் உதவி ஆளுநர் G.M தாசன் தலைமை தாங்கினார்.
ராமகிருஷ்னா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாலர் கதிரவன்,அவரது மகன் அவினாஷ் முன்னிலை வகித்தனர்.
வேப்பூர் ரோட்டரி சங்கத்தலைவர் ஆனந்தன் வரவேற்றார்.
சிறப்புஅழைப்பாளராக காவல் உதவி ஆய்வாளர் பிரகஸ்பதி கலந்து கொண்டு சாலைபாதுகாப்பு குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார்.
பின்னர் ரோட்டரி சங்கம் சார்பில் வேப்பூர் காவலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தலைக்கவசம் வழங்கினார்கள்.
அதைத்தொடர்ந்து மாணவர்கள் விழிப்புணர்வு குறித்த விளம்பரப்பதாகைகள் கையில் ஏந்திக்கொண்டு கூட்டுச்சாலையிலிருந்து பேருந்துநிலையம்,காவல்நிலையம்,அரசுப்பள்ளி வழியாக ஊர்வலமாக கோசங்கள் எழுப்பி சென்று வட்டாட்சியர் அலுவலகம் வழியாக கூட்டுச்சாலை வந்தடைந்தனர்.
இதில் துணைத்தலைவர் EV சிங்கத்துரை,வேல்முருகன்,அமானுல்லாகான்,செல்வராஜ்,ராமலிங்கம்,சுடர்ஒளி,வரதராஜன்,கனகசபை, மற்றும் வேப்பூர் ரோட்டரி சங்க குடும்ப உறுப்பினர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.
புவனாசில்க்ஸ் உரிமையாளர் சரவணன்,குபேரன் எஜென்ஸி குபேரன் ஆகியோர் மாணவர்களுக்கு பிஸ்கட்,கூல்ட்ரிங்ஸ்,தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார்கள்.
முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் அன்பரசன் நன்றிக்கூறினார்.
Tags
கடலூர்