ஆரணி ஆக.7
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூர் அம்பேத்கர் நகர் அங்கன்வாடி மையத்தில் நேற்று உலக தாய்ப்பால் வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மேற்கு ஆரணி ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் நித்யா முன்னிலை வகித்தார். மைய பொறுப்பாளர் சுஜாரதி வரவேற்று பேசினார். அப்போது, தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், உலக தாய்ப்பால் வாரம் வருடம்தோறும் ஆகஸ்ட் 1 முதல் 7வரை கொண்டாப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் உகந்த ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் அடைய, குழந்தைகளுக்கு வாழ்க்கையின் முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தாய்ப்பால் கொடுக்கும்போது சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது. இருப்பினும், தற்போது உலகளவில் ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில் 40 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்கிறார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து அனைவருக்கும் சத்துணவு வழங்கப்பட்டது. விழாவில் தாய்மார்கள் குழந்தையுடன் கலந்து கொண்டனர்.