இளைஞர் அணி மாநாட்டிற்கு தர்மபுரி மேற்கு, கிழக்கு சார்பில் ரூ.1.21 கோடி நிதி

இளைஞரணி சார்பில் ரூ. 21 லட்சம் வழங்கப்பட்டது

தர்மபுரி, செப்.28-

தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் காரிமங்கலத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17-ம் தேதி நடைபெறும் மாநில இளைஞரணி மாநாட்டிற்கு தர்மபுரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் வழங்கினர். இதேபோன்று தர்மபுரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் ரூ.21 லட்சம் நிதியை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், மேற்கு மாவட்ட அமைப்பாளர் ஆர். சிவகுரு மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர்கள் வழங்கினர். இதன் மூலம் தர்மபுரி மாவட்ட தி.மு.க. மற்றும் இளைஞர் அணி சார்பில் சேலம் இளைஞரணி மாநில மாநாட்டிற்கு மொத்தம் ரூ.1.21 கோடி நிதி வழங்கப்பட்டது.
Previous Post Next Post

نموذج الاتصال