தஞ்சைக்கு சிறப்பு மேல் சிறப்பு திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தஞ்சாவூர் ஆணையராக நியமனம்செய்யப்பட்டிருக்கிறார்.
தர்மபுரி, கடலூர், திண்டுக்கல், சிறப்பான மாநகராட்சியை மாற்றியமைத்து தஞ்சையில் தற்பொழுது சோழ தேசத்தை சொர்க்கபூமியாக மாற்ற ஒரு துணிச்சலான ஆணையர் மகேஸ்வரியை தற்பொழுது அரசு நியமித்துள்ளது பொறுப்பேற்றுக் கொண்ட மகேஸ்வரி இன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்.
அரசு கொண்டுவரும் திட்டங்களையும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மாநகராட்சிநிர்வாகம் தொடர்ந்து மக்களுக்கான பணிகளை மேற்கொள்ளும் அதற்காக என்னை பணி மேற்கொள்ள ஆணை வழங்கியுள்ளனர் தமிழக அரசுக்கும் தஞ்சாவூர் பகுதி மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் எனது பங்கு 100% அயராத இருக்கும் இவ்வாறு ஆணையர் மகேஸ்வரி தெரிவித்தார்.
தஞ்சாவூர் பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க நகராகும். தஞ்சாவூர் காவேரி டெல்டா பகுதியில் தஞ்சாவூர் முக்கிய விவசாய பகுதியாகவும், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகவும் 100 47 அச்ச ரேகையிலும், 790 08 பூமத்திய ரேகையிலும் உள்ளது. தஞ்சையில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அழகின் கம்பீர சாட்சியாக நிற்கும் மிகப்பெரிய கோயில். மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட திருக்கோயில். இந்தியாவின் சிற்பக் கலைக்கு தஞ்சைப் பெரிய கோயில்தான் முகவரி. தஞ்சை மாநகராட்சியின் அடுத்த முகவரியாக தற்பொழுது மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பதவியேற்று உள்ளது கூடுதல் ஒரு சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags
தஞ்சாவூர்