ஈரோடு செப் 24-
ஈரோடு ரன்னர்ஸ் கிளப் சார்பில்
மாரத்தான் போட்டி வருகிற அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டி-ஷர்ட் மற்றும் பதக்கங்கள் அறிமுக விழா ஈரோட்டில் நடந்தது. விழாவுக்கு ஈரோடு ரன்னர் கிளிப்பின் செயலாளர் பிரசன்னா தலைமை தாங்கினார் தலைவர் அருந்ததி செல்வன் முன்னிலை வகித்தார். ஒளிரும் ஈரோடு தலைவர் சின்னசாமி மற்றும் தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு டி -சர்ட் மற்றும் பதக்கங்களை அறிமுகம் செய்தனர்.
இதுகுறித்து ஈரோடு ரன்னர் க்ளப் நிர்வாகிகள் கூறும்போது :-
ஈரோட்டில் இரண்டாவது முறையாக போதைப்பொருள் ஒழிப்பு தூய்மையை வலியுறுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கும் இந்த போட்டி எட்டு வயது முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு 5 கிலோ மீட்டரும், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 10 கிலோமீட்டரும், அதற்கு மேல் உள்ள வயதினருக்கு 21 கிலோமீட்டர் தூரத்திற்கும் மாரத்தான் நடத்தப்படுகிறது. ஆண்களும் பெண்களும் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு ரூ 3 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகிறது. இப் போட்டியில் பங்கேற்க 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என கூறினார்கள். மேலும் இவ்விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Tags
ஈரோடு